
மருத்துவக் கல்லூரி உறுதியேற்பு விவகாரம்-மதுரை அரசு மருத்துவ கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விசாரணை நடத்தினார்…
மதுரை மருத்துவகல்லூரியில் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுவந்ததுஇந்த விவகாரம் தொடர்பாக டீன் ரத்தினவேலு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதீஷ் குமாரவேல் உள்ளிட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
செய்தியாளர்களிடம் மாணவர்கள் கூறும் போது … நாங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் இருந்துதான் உறுதிமொழியை டவுன்லோடு செய்தோம். அதிலும் ஆங்கிலத்தில்தான் உறுதிமொழி ஏற்றோமே தவிர சமஸ்கிருதத்தில் அல்ல. அவசரமாக நடந்த நிகழ்ச்சியால் நாங்கள் டவுன்லோடு செய்த காப்பியை டீனிடம் காண்பிக்க முடியவில்லை. மேலும் ஹிப்போகிரேட்டிக் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது. என மாணவர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதீஷ் குமாரவேல் உள்ளிட்ட 4 பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து கலெக்டர் அனீஷ்சேகர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வின் தயாரிப்பு குறித்து கேட்டறிந்ததுடன் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கொடுக்க விரும்பினால் விளக்கம் அளிக்கலாம் என மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவுறுத்தியுள்ளார்