• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிம்பு படம் கைவிடப்பட்டதா?

வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை முடித்த பிறகு சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கொரோனா குமார் படம் பாதியில் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா குமார் படத்தை டைரக்டர் கோகுல் இயக்க உள்ளதாகவும், இதில் சிம்புவிற்கு ஜோடியாக டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ள இந்த படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்க போகிறார் எனவும் கூறப்பட்டது.

ஆனால் கொரோனா குமார் படம் திடீரென கை விடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு தனது சம்பளத்தை 25 கோடியில் இருந்து 30 கோடியாக உயர்த்தி உள்ளாராம். இதனால் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதால் தயாரிப்பு நிறுவனம் தயக்கம் காட்டுவதால் கொரோனா குமார் படத்தை கைவிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

இதற்கிடையில் இன்னும் சில படங்களில் நடிக்க சிம்புவிடம் பேசப்பட்டு வருகிறதாம். பிக்பாஸ் அல்டிமேட் உடன் தற்போது நடிக்கும் படங்களின் வேலைகளை முடித்து விட்டு, பிறகு புதிய படங்களில் நடிக்க சிம்பு தயாராவார் என கூறப்படுகிறது.