தனுஷுடனான பிரிவிற்கு பிறகு, ஐஸ்வர்யாக ரஜினிகாந்த் மீடியாவில் பதிவிடும் ஒவ்வொன்றும் வைரலாகி வருகிறது! தற்போது முசாபிர் என்ற மியூசிக் வீடியோவை இயக்கியுள்ள அவர், அடுத்தடுத்த ப்ளான்களை செயல்படுத்த தயாராகி வருகிறார்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டு இணைந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ள நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து முடிவை வெளியிட்டனர். இதற்கிடையே, நடிகர் தனுஷின் மாறன் படம் நாளைய தினம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இதேபோல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது முசாபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளில் தன்னை பிசியாக்கிக் கொள்ளவும் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், அதில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகார அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்!