• Wed. Dec 11th, 2024

போர் பதற்றத்தால் உக்ரைனில் விமானங்கள் பறக்கத்தடை..!

Byகாயத்ரி

Feb 24, 2022

உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷியா தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது.

இதை தொடர்ந்து உக்ரைனில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தனது வான் வெளியை மூடியதால் எந்த நாட்டின் பயணிகள் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது. வர்த்தகம் மற்றும் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.