உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உக்ரைனின் உள்ள தமிழர்கள் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவி கோரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி வருகின்றன. ஒடேசா, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே உக்ரைனின் தலைநகர் கீவ் நகருக்கு சென்றுள்ள ஏர் இந்தியா விமானம் நடுவழியில் தவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.