


வக்பு வாரிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நிறைவேற்றிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலாளர் வே.பாலையா தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் சி.சு.இளையகௌதமன் முன்னிலை வகித்தார்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டனக் கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் மண்டல துணைசெயலாளர் அ.முத்துராசு,
மாநில துணைச்செயலாளர் பெரியசாமி, மாநில அமைப்புச் செயலாளர் மோ.எல்லாளன், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட துணைச்செயலாளர்
சுடர்மணி, மாவட்ட செய்தித்தொடர்பாளர் மூ.ஆதிவளவன், மாவட்ட அமைப்பாளர்கள்
ரவி,சேட்டு, ஆதி, ஜான்சன், ராஜேந்திரன், ஜேம்ஸ்வளவன், கண்ணன், விஜயன், காளிதாஸ், ராமதாஸ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


