


அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி ஆணைக்கிணங்க சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் ஏற்பாட்டில் கிழப்பூங்குடி, பிரவழுர்,நாலுகோட்டை, தமறாக்கி, உட்பட 40க்கும் மேற்பட்ட ஊராட்சியில் பூத் கிளைக் கழகம் அமைத்தல், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்த்தல், இளம் தலைமுறையினர் விளையாட்டு அணியின் உறுப்பினர் சேர்த்தல் மற்றும் கட்சி பணிகள் குறித்து,

மாவட்ட பொறுப்பாளர் அமைப்பு செயலாளர் சீனிவாசன், மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்கள்.

உடன் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இராமு இளங்கோவன், நகர செயலாளர் ராஜா, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் திரு சங்கர்ராமநாதன், வர்த்தக அணிஓன்றிய செயலாளர் அருண்குமார்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர். கோமதிதேவராஜ், மாணவரணி நகர செயலாளர் ராஜபாண்டி, இளைஞரணி செயலாளர் பாபு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் துளாவூர் பார்த்திபன்,நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன்,மற்றும் கிளை கழக செயலாளர்கள் பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

