• Sat. Apr 26th, 2025

தமிழக முதல்வருக்கும் போக்குவரத்து துறை அமைச்சருக்கும் வேண்டுகோள்..,

ByG.Suresh

Apr 6, 2025

சிவகங்கை நகரமானது தொன்மை வாய்ந்த நகரம் மற்றும் மாவட்ட தலைநகரமாகும். வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது. சிவகங்கை நகரானது பல கிராமங்களை உள்ளடக்கியது.

சிவகங்கையை சுற்றியுள்ள பல இலட்சக்கணக்கான பொதுமக்கள் பல ஊர்களுக்கு போக்குவரத்திற்காக வந்து செல்லும் நகரமாக உள்ளது. இந்நிலையில் சிவகங்கையிலிருந்து கன்னியாகுமரி சேலம் பெங்களூர், சிதம்பரம். இராமேஸ்வரம், சென்னை ஆகிய பெரு நகரங்களுக்கு செல்ல இரவு நேரங்களிலும் பேருந்து வசதி இல்லை அதே போன்று சிவகங்கை நகரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து கடந்த ஒரு வருட காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகங்கை நகர் வாழ் பொதுமக்கள் மற்றும் சிவகங்கை நகரைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையினை ஏற்று ஒரு வருட காலத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சென்னைக்கு செல்லும் அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க ஆவண செய்யவும்.

மற்றும் இதர பெருநகரங்களுக்கு செல்ல பேருந்து வசதியினை ஏற்படுத்தி தர ஆவண செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன் என சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.