

உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள மாமல்லபுரம் செஸ்ஒலிம்பியாட்போட்டி யின் அரங்கம் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பிரமாண்டமாக தயாராகியுள்ள அரங்கத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த அரங்கத்தில் ஒரே சமயத்தில் சுமார் 1400 வீரர்கள் விளையாடும் வசதி உள்ளது. பங்கேற்கும் வீரர்களுக்கு தென்னிந்திய உணவு, வடஇந்தியஉணவு ,வெளிநாட்டு உணவு என பல்வகை உணவுகள் வழங்கப்பட உள்ளன. 187 நாடுகளில் இருந்து வந்துள்ள வீரர்கள் தங்க வசதியாக உயர்தர விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
