

மயிலாடுதுறை அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கடத்திச்சென்ற வாலிபர்…பரபரப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே 15க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஸ்வரன் என்பவர் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை ஆள் வைத்து கடத்தியுள்ளார். தகவலறிந்து விரைவாக செயல்பட்ட போலீசார் விழுப்புரம் விக்ரவாண்டி டோல்கேட் அருகே வாகனத்தை மடக்கிப் பிடித்து பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர்.மேலும் கடத்திச்சென்ற விக்னேஸ்வரன் அவரது கூட்டாளிகள்இருவரை கைது செய்தனர்.மேலும்பலரை தேடி வருகின்றனர்.
