நாடாளுமன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் பயன்படுத்தகூடாத வார்த்தையை பேசியுள்ளார். இதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்விஎழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இரு அவைகளிலும் எம்பிக்கள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டது. அதில், ஊழல், ஒட்டுகேட்பு, ஊழல், நாடகம், கபட நாடகம், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், முதலைக் கண்ணீர் உள்ளிட்ட வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டன.
இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பற்றி விவாதம் நடந்தது. அப்போது தமிழில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காதது முதலைக் கண்ணீர் வடித்த கதை, என்று பேசியிருந்தார்.முதலைக் கண்ணீர் என்ற வார்த்தை தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அதை மத்திய அமைச்சரே பேசியிருக்கிறாரே என்று சுட்டிக் மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், முதலைக்கண்ணீர் என்ற சொல் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று பேசிய நிர்மலா சீதாராமன் இந்த சொல்லை அழுத்தந்திருத்தமாக பயன்படுத்தினார். என்ன செய்யப்போகிறீர்கள் சபாநாயகர் என டேக் செய்து சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.