• Sun. Oct 6th, 2024

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புல்வாய் கிராமத்தில் கிராம சபைக்கூட்டம்

ByA.Tamilselvan

May 1, 2022

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புல்வாய்க்கரை கிராம ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள் குறித்தது விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
நான் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று, முதன்முதலாக பார்த்த கிராமங்களில் புல்வாய்க்கரை கிராமமும் ஒன்று. இந்த புல்வாய்க்கரை ஊராட்சி மன்ற தலைவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கிராம சபை என்பது அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் அனைவரும் உங்;களுக்கு சேவை செய்வதற்கு தான் நீங்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளீர்கள். எனவே, நாங்கள் உங்கள் கிராமத்திற்கு என்னென்ன அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தோம் என்று உங்களுக்கு தெரிவிக்க வேண்டியது எங்களுடைய கடமை. அதைபோல் உங்கள் கிராமத்திற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டியது உங்கள் கடமை.
பள்ளி மேலாண்மைக்குழு என்பது ஒரு அருமையான திட்டம் என்றும், இத்திட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களில் பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கல்வி ஒன்று தான் உயர்வு தரும் என்றும், இந்த கிராமத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் அவரவர் குழந்தைகளை கல்வி கற்க வைக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.
சுகாதராத்துறை மூலாக மக்களை தேடி மருத்துவம் மற்றும் வேளாண்மைத்துறை மூலமாக கிஷான் கிரிடிட்டு கார்டு, பிரதம மந்திரி காப்பீடு திட்டம் ஆகியவற்றில் இணைந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறைகள் மூலமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மூலமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி., பார்வையிட்டு, மரக்கன்றினை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் .உத்தண்டராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .உமாசங்;கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) .சங்கர்.எஸ்.நாராயணன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் .ராஜம், ஊராட்சி மன்;ற தலைவர் யுவராணி, வட்டாட்சியர் .சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புல்வாய்கரை ஊராட்சி பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *