நாம் தமிழர் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கரிகாலன், திமுக வை வம்பிலுக்கும் வகையில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபூரிமாவட்டம் அரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
நாம் தமிழர் நிகழ்ச்சி கொள்கை விளக்கக் கூட்டத்தில் பேசிய கரிகாலன், பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கரிகாலன், “அதிமுக ஆட்சியில் சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை கொண்டு வரப்பட்ட போது, திமுக அதை எதிர்த்து. ஆனால், இப்போது அதே சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை அதிவிரைவு சாலை எனப் பெயர் மாற்றம் செய்து, தற்போது திமுக அரசு நடைமுறைப்படுத்த முயல்கிறது.கொள்ளை முயற்சி இதன் மூலம் நமது மலைகளில் இருக்கும் மனிமங்களை கொள்ளையடிக்க முயல்கிறார்கள். அரூர் பகுதியில் வாழும் மக்கள் இந்தத் திட்டத்தை உயிரை கொடுத்தாவது நிறுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு மக்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும். அதற்கு எப்போதும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் உங்களுக்குத் துணை நிற்பார்கள்.
வா மோதி பார்ப்போம் கடந்த முறை மொரப்பூர் பகுதியில் பொதுக் கூட்டம் நடந்த போது, எதார்த்தமாக இருந்துவிட்டோம். அதைப் பயன்படுத்தி திமுக நிர்வாகிகள் மேடை ஏறி பிரச்சினை செய்துவிட்டீர்கள். இந்த முறை முன் தயாரிப்போடு வந்துள்ளோம். வா மோதி பார்ப்போம். வந்தால் சம்பவம் தான். வரிப்புலி நாங்கள், வந்தால் திரும்பிப் போகமுடியாது” என்று திமுகவினருக்கு அறைகூவல் விடுக்கும் வகையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.