• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

ஆகஸ்ட் 11ல் ரிலீஸாகும் விக்ரமின் கோப்ரா..!

Byவிஷா

Jun 24, 2022

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாக இருப்பதாக என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது
டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். கோபுரா படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் விக்ரம் கணித மேதையாக நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது. அதேபோல் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு தொடங்கி சில வருடங்கள் ஆனாலும், கதை முழுமையாக எழுதப்படாததால் படப்பிடிப்பிற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கின. கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என செய்திகள் வெளியாகி வந்தன. அதை உறுதி செய்யும் விதமாக விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். அவர் இசையில் வெளியான முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் படத்தின் டீசரும் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இதனால் கோப்ரா படமும் நல்ல வரவேற்பை பெறும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர்.