• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் காலிப்பணியிடங்கள்

ByA.Tamilselvan

Jun 24, 2022

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 7,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கும், அதேபோல இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.