அரசியல் தலைவர்கள் உட்பட யாரையும் தனது ரசிகர்கள் இழிவுபடுத்த கூடாது என நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இவரது மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘அரசு பதவிகளில் உள்ளோர்களை ,அரசியல் கட்சி தலைவர்களை மற்றும் யாரையும் ,எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில் ,இணையதளங்களில் போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ ,பதிவிடவோ மீம்ஸ் உள்ளீட்டை எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது விஜய் அவர்களின் அறிவுறுத்தலை யாரேனும் மீறினால் அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை விஜய் ,அவர்களின் உத்தரவின் பேரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
