நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் உருவாக்கியுள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனைதொடர்ந்து, அடுத்ததாக வம்சி இயக்கத்தில் நேரடியாக தெலுங்கில் விஜய் தளபதி 66 திரைப்படத்தில் நடிக்கிறார். திரைப்படத்தில் தில் ராஜு தயாரிக்க இருக்கிறார்.
இந்நிலையில், திருவான்மியூரில் நடைபெற்ற கல்பாத்தி அகோரம் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தளபதி விஜய் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.