ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தொடர்ந்து மலைக்கோவிலில் வீற்று இருக்கும் சுந்தர மகாலிங்கம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தசரா திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் எடுத்த துரித நடவடிக்கைகளால் நோய் தொற்று நோய் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இருந்தபோதும், ஊரடங்கு தளர்வில் அதிகம் கவனம் செலுத்திய மாநில அரசு பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒருசில தளவுர்களுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தி இருந்தது.
விஜயதசமி திருநாள் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், ஒவ்வோரு வருடமும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இந்த உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த வருடம் போலவே இந்த வருடமும் பக்தர்கள் இன்றி நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நேற்று இரவு ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தொடர்ந்து மலைக்கோவிலில் வீற்று இருக்கும் சுந்தர மகாலிங்கம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.