• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விஜய்க்கு அப்புறம் எஸ்.கே தான்.! – யார் சொன்னது?

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய், அஜித்திற்கு பிறகு இவரது திரைப்படங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். இவர் தற்போது டான், மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகரும், வாலி,குஷி போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்த பிரபல இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது ” சிவகார்த்திகேயன் சார் மிகவும் நல்ல மனிதர். அவர் இப்போது இருக்கும் உச்சம் மிக பெரியது. டான் படப்பிடிப்பிற்கு வரும் போது தான் பெரிய நடிகர் என்பதை காட்டிகொள்ளமாட்டார். விஜய் சாருக்கு அடுத்த படியா குடும்ப ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சிவகார்த்திகேயன் படத்திற்கு தான் செல்கிறார்கள். அவர் எங்கள் வீட்டு பிள்ளை என்ற அன்பை பெற்றுள்ளார். டான் படத்தில் அவருடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.