

நடிகர் அஜித் முன்னணி மற்றும் முக்கிய நடிகராக கோலிவுட்டில் இருந்து வருகிறார். அவரது கேரக்டர்கள் சமீப காலங்களில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் இணைந்துள்ளார் அஜித். போனி கபூரே இந்தப் படத்தை 3வது முறையாக தயாரித்து வருகிறார். இதனிடையே எப்போதும் இல்லாத முடிவாக தற்போது மாறுபட்ட முடிவை எடுத்துள்ளார் அஜித்.
ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கமிட்டாகும் தனது முடிவை மாற்றிக் கொண்டு தற்போது அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். தற்போது வலிமை படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் அஜித்தின் 63வது படம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 63வது படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் வரும் மே 1ம் தேதி தனது பிறந்தநாளையொட்டி தற்போது நடித்துவரும் 61வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஏகே63 படம் குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.