கடந்த 2021-ல் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு திருமணமானது. அவருடைய இளைய மகள் அதிதி, விருமன் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார். இத்தகைய நிலையில், அடுத்ததாக சங்கரின் மகனும் ஹீரோவாக இருக்கிறாராம். முன்னதாக நடிகர் விக்ரமின் மகன், ஏ.ஆர்.ரகுமான் மகன் மற்றும் சங்கரின் மகன் அர்ஜித் ஆகிய மூவரும் நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதனை தொடர்ந்து சங்கரின் மகன் அர்ஜித் அழகாக இருக்கிறார். எனவே, ஹீரோவாக நடிக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது அவர் நடிகாராகியுள்ளார்.