நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம்தெரிவித்திருந்தார்.இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.விநாயகரை நடிகர் விஜய் குறைவாக பேசுவதால் அவர் படத்தை பார்க்காதீர்கள் என மதுரை ஆதீனம் பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விஜய் ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் நீங்களாம் தளபதியை பார்த்து பேசலாமா? வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து . எங்களுக்கு ஜாதி ,மதம் ஏதுமில்லை.தளபதி மேல் மக்கள் கொண்டஅன்புக்கு வானமே எல்லை, என்று எழுதப்பட்டுள்ளது.