• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 நிதி தேவையா?- பாஜக மாநில துணைத்தலைவர் கேள்வி

ByA.Tamilselvan

Sep 2, 2022

ரூ. 1000 திட்டத்தை கைவிட்டு மது விலக்கை நடைமுறைப் படுத்தவேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நிதி நிலை சரியானவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தேர்தலுக்கு முன்னர் ‘கஜானா காலி’ என்று சொல்லி வாக்கு சேகரித்தபோது, நிதி நிலை சரியானவுடன் தருகிறோம் என்று ஏன் சொல்லவில்லை? ‘குடி குடியை கெடுக்கும்’ என்ற வாசகம் கொண்ட ‘சரக்கை’ அதிகம் விற்று பலரின் ‘விதி’யை முடித்து, குடும்ப தலைவனை இழக்கும் குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 தேவையா? என்பதை முதல்வர் சிந்திக்க வேண்டும். ரூபாய் 1000 திட்டத்தை கைவிட்டு மது விலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பல லட்சம் குடும்பங்கள் சிறப்பாக வாழும். கோடிக்கணக்கான தமிழர்கள் வளம் பெறட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.