• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரசாயன வாயு உற்பத்தி செய்யும் இடத்தில் வாயு கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து..!

ByM.I.MOHAMMED FAROOK

Jul 17, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வடக்குவாஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று ரசாயன வாயு உற்பத்தி செய்யும் இடத்தில் திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டதால் அந்த பகுதியில் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

அந்தப் பகுதியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறல் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.வாந்தி மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உள்ளிட்ட 14 பேர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் கிராம மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விபத்து குறித்து அரசு அதிகாரிகள்,போலீசாரிடம் கேட்டறிந்தார்.இதனைத் தொடர்ந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடக்கு வாஞ்சூர் கிராம மக்களை சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

அப்போது செய்தியாளர் சந்தித்த நிலைமை திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: வடக்கு அஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக விவசாயம் புகை வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டு 14 பேர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தை உள்ள 14 பேரும் தற்போது நலமாக உள்ளதாகவும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறிய மீனாட்சிசுந்தரம் தொழிற்சாலையை தீவிரமாக கண்காணிக்கவும் விபத்து குறித்து முழு தகவலையும் சேகரித்து தொழிற்சாலை குறித்த நம்பகமான செயல்பாடு அறிக்கை வந்த பிறகு தொழிற்சாலை இயங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.