• Fri. Apr 26th, 2024

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.100 கோடி..

Byகாயத்ரி

Sep 2, 2022

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை தொடர்ந்து ஆறாவது மாதமும் ரூ. 100 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடர்ந்து ஆறாவது மாதமாக உண்டியல் காணிக்கை மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக ரூ.5 கோடிக்கு மேல் காணிக்கைகள் வந்தன. மேலும், ஆகஸ்ட் மாதம் 22 நாட்களில் உண்டியல் வருமானம் ரூ.100 கோடி வருவாய் கிடைத்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திலும் ரூ.140 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 22 லட்சத்து 80 ஆயிரத்து 84 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் ரூ. 140.07 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியதன் மூலம் வருவாய் கிடைத்திருப்பது புதிய சாதனையாக பதிவாகியுள்ளது . 10 லட்சத்து 79 ஆயிரத்து 900 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ஜூலை மாதத்தில் உண்டியல் மூலம் ரூ. 139.33 கோடி செலுத்தினர். ஜூலை மாதத்திலும் 21 நாட்களில் உண்டியலில் ரூ.100 கோடியே 75 லட்சம் பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். ஜூன் மாதத்தில் உண்டியலில் ரூ .123.74 கோடி செலுத்தினர். மே மாதத்தில் ரூ.130 கோடி காணிக்கை செலுத்தினர்.இப்படி தொர்ந்து 6 மாதங்களாக ரூ.100 கோடியை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *