• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

சாலை விபத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் பலி

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் 7 பேர் தங்கள் விடுமுறையை செலவழிக்க திட்டமிட்டனர். எனவே நந்தகுமார் என்ற கல்லூரி மாணவர் தனக்கு சொந்தமான காரில் தர்மபுரியை சேர்ந்த சபரி,சந்துரு ,ஊத்தங்கரையைச் சேர்ந்த லட்சுமணன், கோவர்த்தனன் மற்றும் சேலத்தைச் சேர்ந்த போகன் சங்கர் மற்றும் எடப்பாடியைச் சேர்ந்த நவநீதன் ஆகிய ஏழு மாணவர்கள் இன்று மதியம் நாமக்கலில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

அவர்களது கார், குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த 7 மாணவர்களும் உனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள எட்டிமடை குட்டை பகுதியை சேர்ந்த நவநீதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மீதமுள்ள ஆறு பேரும் முதலுதவி சிகிச்சைக்கு பின், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.