• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

மூத்த நடிகைகள் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்படுகிறார்கள்.., நடிகை ரேகா வருத்தம்..!

Byவிஷா

Oct 28, 2023

தன்னைப் போன்ற வயது மூத்த நடிகைகள் பலரும் கறிவேப்பிலையைப் போல தூக்கி எறியப்படுகிறார்கள் என நடிகை ரேகா வருத்தம் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் பேசிய நடிகை ரேகா, 40 வயதை கடந்த நடிகைகள் கறிவேப்பிலை போல தூக்கி எறியப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். கமர்சியல் திரைப்படங்களால் ஹீரோயினுக்கான முக்கியத்துவம் மறைந்துவிட்டதாகக் கூறிய ரேகா, தன்னைப் போன்ற நடிகைகளுக்கு பணம் பொருட்டல்ல, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து நிரூபிக்க வேண்டும் என்றார். மேலும், உயிருள்ள வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என தனது ஆசையையும் அவர் வெளிப்படுத்தினார்.