• Wed. Apr 24th, 2024

மூவர்ண கொடியில் மின்னும் வேலூர் கோட்டை

ByA.Tamilselvan

Aug 11, 2022

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு சுதந்திர தினம் ‘சுதந்திர தின அமுத பெருவிழா’ (Azadi Ka Amrit Mahotsav) என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, இந்தியா முழுவதும் நமது தேசப்பற்றை பறை சாற்றும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்ஷா அணை தேசியக்கொடி நிறத்தில் தற்போது ஒளிர ஆரம்பித்திருப்பது நாட்டு மக்களின் மனதில் தேசபக்தி உணர்வைத் தூண்டும் வகையில் உள்ளது.


இதே போன்று வேலூர் மாவட்டத்திலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அமிர்த பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றாக, சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டை மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது. இந்த மின்விளக்குகள் தேசிய கொடியின் முவர்ண நிறத்தில் ஒளிர்கிறது. இது மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.மேலும், நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கட்டணமின்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *