

திருப்பரங்குன்றம் நிலையூர் 1 பிட் பகுதியில் ஆடிபட்ட காய்கறி விதைகள் விநியோக முகாம் நடை பெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நிலையூர் பிட் 1 ல் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆடி பட்ட காய்கறி விதைகள் விநோக முகாம் நடைபெற்றது.
இதில் தோட்டகலைத்துறை உதவி இயக்குநர் கோகில சக்தி, துணை தோட்டக்கலை அலுவலர் சுருளீஸ்வரன், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஆறுமுகம், ஜெயபாலன் , நிலையூர் பிட் 1 கிராம நிர்வாக அலுவலர் கந்தவேல், உதவி வேளாண்மை அலுவலர் டேவிட் புஷ்பராஜ். கிராம உதவியாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆடிபட்ட விதைகள் வழங்கப்பட்டது.

விதைகள் வழங்கும் முகாமில் தோட்டகலைத்துறை உதவி இயக்குநர் கோகில சக்கி கூறும் போது,
ஆடி பட்டத்தில் விவசாயம் சாகுபடி செய்தால் மகசூல் தேடி வரும் என்று பழமொழி உள்ளது. தமிழக அரசு சார்பில் கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

விதைகளை நேர்த்தியாக தேர்வு செய்து பயிரிட வேண்டும். விதை அழுகல். பூச்சி தாக்குதல், போன்றவற்றிலிருந்து பயிர்களை பாதுகாத்து மகசூல் பெற தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும், உரம் பூச்சி மருந்து சரியான முறையில் பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும், தற்போது தக்காளி தட்டுபாடு ஏற்பட காரணம் சுழற்சி முறையில் பயிரிடாமல் அனைத்து விவசாயிகளும் ஒட்டு மொத்தமாக ஒரே பயிரை பயிரிட்டு விளைச்சல் அதிகமாக உண்டாக்கி வீணாக்குவது. இல்லையென்றால் மொத்தமாக பயிரிடாமல் உற்பத்தி செய்யாமல் இருப்பதால் தற்போது தட்டுபாடு ஏற்பட்டு விலை உயர காரணம் என கூறினார்.

