



கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் 75வது ஆண்டு பிறந்த தினம் இன்று தமிழக முழுதும் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபம் அமைந்துள்ள கல்லறைக்கு அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

பின்னர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் அவரது குடும்பத்தினர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், வினோத்குமார், மாநில பொது செயலாளர் எம். எஸ் காமராஜ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர் சிவகுமார், மாமன்ற உறுப்பினர்கள் செல்வகுமார், அனுஷா பிரைட், குமரி கிழக்கு மாவட்ட பொதுசெயலாளர் தாமஸ் உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.


