• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொன்மலை அடிவாரத்தில் அன்பே கடவுள் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் 80ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க விழா நடந்தது.

இந்த விழாவிற்கு டாக்டர் பொன்.யாழினி தலைமை தாங்கினார்.தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜோதி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்றார்.இந்த விழாவில் சோழவந்தான்ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேந்திரன் கொடியேற்றினார். இதில்அப்துல் கலாம் கல்வி சமூக மேம்பாடு மற்றும் கிராம பெண்கள் அறக்கட்டளை தலைவர் முத்துக்குமார்,ஸ்ரீல ஞான அன்னதான சேவா அறக்கட்டளை தலைவர்மகுடீஸ்வரன்,ஆட்டோ ஓட்டுனர் பொதுநல சங்கச் செயலாளர் சமூக ஆர்வலர் கௌரிநாதர்ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

இதில் மாற்று திறனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை அரிசி மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. முடிவில்இல்லக்காப்பாளா ராஜேஸ்வரி நன்றி கூறினார்.