



கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இலக்கிய செல்வர் குமரி அனந்தன் கல்லூரி படிப்பு முடிந்த பின். கோவில் பட்டியில் ஒரு டுயுட்டோரியலில் சில காலம் பயணித்தவர்.
இங்கு ஆற்றிய ஆசிரியர் பணியை விட்டு அடுத்து குமரி யாரின் அரசியலில் அவரது பணி அமைந்தது.

சிறு வயதிலேயே இவரது தந்தை ஹரிகிருஷ்ணன் நாடார் சுதந்திர போராட்டம் காலத்தில். வில்லிசை மூலம் தேசப்பற்று பாடலை மேடை தோறும் படுவதே இவரது பெரும்பாலான மாலை நேரத்து நிகழ்வகா இருந்துள்ளது. அதனை அருகிருந்து பார்த்து வளர்ந்தவர் குமரி அனந்தன்.

வடக்கன் குளம் பகுதியை சேர்ந்த சங்கு பதிப்பகத்தின் உரிமையாளர் சங்கு கணேசனின் மகளோடு குமரி யாருக்கு திருமணம் நடைபெற்றது. தமிழகத்தில் தி மு க வின் அரசியல் பரவேசத்திற்கு பின். பொதுக்கூட்டம் மேடைகளில் திமுக மேடைகளில் அடுக்கு மொழி பேச்சு அனேகமான பேரை ஈர்த்தது.
குமரி அனந்தனின் மேடை பேச்சு தி மு க. மேடையில் ஒலித்த அதே வடிவில் ஒலிக்கச் தொடங்கிய அந்த காலக்கட்டத்தில். தமிழகம் முழுவதும் சிற்றூர், பேரூர்,கிராம பகுதிகளில் இருந்து குமரி அனந்தனுக்கு மேடை அமைந்தது.
வாசிப்பை நேசித்த இவர் வாசித்த பல்வேறு வகையான புத்தகங்கள் ஏராளமான ஒரு பெரிய நூலகம். குமரி அனந்தனின் இலட்சியம் நிறைவேறியதின் அடையாளம், கன்னியாகுமரியில் இவர் உருவாக்கி பராமரித்து வந்த “வரலாற்று கூடம்”
குமரி அனந்தனின் மரணத்திற்கு பின் அவர் பூத உடலை அகஸ்தீஸ்வரத்தில் இவரது பெற்றோர் கல்லறைக்கு அருகில் இவரது உயர் அற்ற உடலை அடக்கம் செய்யவேண்டும்,இதுவே எனது கடைசி ஆசை என எப்போதே உயில் போன்று எழுதிவைத்தார்.
குமரி அனந்தனின் கடைசி ஆசை நிறைவேறாது போய்விட்டது.

இவரது உடலை சென்னையில் தகனம் செய்வது என்று தமிழிசை முடிவு செய்த நிலையில். அவரது குடும்பத்தை சேர்ந்த பலரும். குமரி அனந்தனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாது போனதும். குமரி அனந்தனின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அல்லது தேனாம் பேட்டை காமராஜ் அரங்கில் வைக்க வேண்டும் என சொன்னபோது, தமிழிசை இதனை ஏற்க்க மருந்து விட்டதை அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் கோபத்தோடும், மனவேதனையோடும் பொதுவெளியில் தெரிவித்தார்கள்.
குமரி அனந்தனின் மறைவின் 16_நாள் சடங்கு முடிந்ததும். குமரி அனந்தனின் “அஸ்தி”அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமார் நினைவிடத்தில். இவர்களது பெற்றோர் கல்லறைக்கு அருகே அஸ்தி கட்டம் அமைக்க இருப்பதாக.கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்தார்.

