• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மண் கிடைக்காமல் வாழ்வாதாரம இழந்து வாடும் மண்பாண்ட தொழிலாளர்..,

ByRadhakrishnan Thangaraj

Aug 16, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி Q 752 மண்பாண்ட தொழிலாளர் கூற்று உற்பத்தி ஒப்படை சங்கம் மற்றும் இராஜபாளையம் குலாலர் மண்பாண்டம் நாட்டு செங்கல் சூளை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட நாட்டு செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் கலந்தாய் கூட்டம் தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த நாட்டுச் செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆதி காலத்தில் மண் பாண்டகால் செய்து வாழ்வாதாரம நடத்தி வந்த மக்கள் 1980 ஆண்டுகளுக்கு பின் அரசு அறிவித்த உத்தரவின் பெயரில் இலவசமாக கண்மாயில் மண் எடுத்துச் சென்று நாட்டு செங்கச் சூளைகள் நடத்தி வந்த நிலையில்

தற்போது விவசாயிகளுக்கு இலவசமாக மண்ணல்ல அனுமதி அளித்துள்ள அரசு செங்கல் சூளை தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு வரக்கூடிய 5 லட்சம் மக்கள் செங்கல் சூளைகளுக்கு மண் கிடைக்காததால் வாழ்வாதாரத்தை இழந்து வாடி வருகின்றனர்.

ஆகையால் தற்போது வந்துள்ள தமிழக வெற்றி கழக அரசு விவசாயிகளுக்கு எப்படி மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்குகின்றன அதுபோல் நாட்டு செங்கச் சூளை நடத்தி வரக்கூடிய எங்களுக்கும் இலவசமாக மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டுமானால் தமிழக அரசுக்கு கோரிக்கை முன் வைத்தனர்