• Tue. Apr 22nd, 2025

குமரி சுரேஷ் ராஜான் தமிழக நுகர் பொருள் வாணிப கழக தலைவராக நியமனம்

குமரி சுரேஷ் ராஜான் தமிழக நுகர் பொருள் வாணிப கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டது. ஆச்சரியம் ஆனால் உண்மை….. காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனதம்மா என்ற சினிமா பாடல் தான் நினைவில் வந்தது.

தமிழ் புத்தாண்டு தினத்தன்று குமரி திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளருக்கு வாரியம் ஒன்றியத்தின் தலைவர் பதவியை கொடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்து விட்டதாக, கடந்த சில மாதங்களாக திமுகவில் சுரேஷ் ராஜான் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்த உற்சாகத்தின் தகவல்கள் மூன்று கடல் அலைகள் எழுப்பும் அலை ஓசைகளை விட பெரிய ஓசையாக ஒலித்தது தொடர்ந்த நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான செய்திதான்.

தமிழக அரசாணை வெளியீடு புத்தாண்டு தினம் மாலையில் அதிகார பூர்வமாக வெளிவந்து விட்டது என்று, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை திமுகவினர் மத்தியில் இந்த செய்தி ரெக்கை கட்டி பறக்கும் நிலையில் தகவலில் உண்மை தன்மை இருக்கிறதா என்ற திமுகவின் ஒரு பகுதியினர் கேள்வி எழுப்பும் நிலையில்,

கடைசியாக வந்துள்ள செய்தி சென்னையில் இன்று காலை(ஏப்ரல்_15)ல் சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் தமிழக நுகர் பொருள் வாணிப கழகம் சென்னை அலுவலகத்தில் சுரேஷ் ராஜான் வாணிப கழக தலைவராக பதவி ஏற்க போகிறாராம்.