• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’…

BySeenu

Aug 16, 2026

கோவையில் ‘யூனிகார்ன் கோச் உச்சி மாநாடு 2026’ எனும் நான்கு நாள் பிரமாண்ட மாநாடு துவங்கியது..

அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,சாதனை, சமூகப் பங்களிப்பு, ஆன்மிக வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் சிறப்பான அங்கீகாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெற்றன…

மாநாட்டை பிஞ்சி மார்க்கெட்டிங் நிறுவனத்தின் நிறுவனர் கோபால் கிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்…

தொழில்முனைவோர் மற்றும் பயிற்சியாளர்களை ஒரே தளத்தில் இணைத்து, அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு உரைகள், கலந்துரையாடல்கள், குழு விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக 23 ‘யூனிகார்ன்’ விருதுகள் வழங்கப்பட்டன.

ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் வருவாய் ஈட்டிய பயிற்சியாளர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், 48 பயிற்சியாளர்களுக்கு அங்கீகாரம் மற்றும் விருதுகளை கோபால் கிருஷ்ணன் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்..

மேலும், அடுத்தகட்ட சாதனையை நோக்கிப் பயணித்து வரும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 25 ‘வளரும் யூனிகார்ன்’ விருதுகளும் வழங்கப்பட்டன.

இது குறித்து கோபால் கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வெற்றியை கொண்டாடுவதுடன் சமூகத்திற்கான பங்களிப்பையும் வலியுறுத்தும் வகையில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் ‘அனாதி’ அறக்கட்டளையின் சமூகப் பணிகளுக்கு ஆதரவாக நடைபெறுவதாக தெரிவித்தார்..

வருவாய் சாதனையை மட்டும் கொண்டாடாமல், சமூகத்திற்கான பங்களிப்பு, தனிமனித மாற்றம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை உருவாக்குவதே மாநாட்டின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்…