• Thu. Apr 25th, 2024

பாரா ஒலிம்பிக் போட்டியால் மதிப்பு கூடியது…டென்னிஸ் வீரர் சுகந்த்

Byகாயத்ரி

Dec 2, 2021

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்ததால் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளை சமூகம் மதிக்கத் தொடங்கி உள்ளது என்று பாரா டென்னிஸ் வீரர் சுகந்த் கடம் தெரிவித்துள்ளார். உகாண்டாவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா பேட்மின்டன் போட்டியில் இந்திய வீரர் சுகந்த் கடம் எஸ்எல்4 வகை ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். நேற்று தாயகம் திரும்பிய சுகந்த் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்றது மனஉறுதியை தருகிறது. இதற்கு முன்பு பெரு, துபாய் சர்வதேச போட்டிகளில் தங்கம் வெல்ல முடியாமல் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமடைந்தேன்.

இம்முறை தங்கம் வென்றதில் மகிழ்ச்சி. டோக்கியோ பாரா ஒலிம்பிக்சில் இந்தியர்கள் பதக்கங்களை குவித்தனர். அதனால் சமூகம் பாரா வீரர்கள், வீராங்கனைகளை மதிக்கத் தொடங்கியுள்ளது. எங்கள் சாதனைகளை அங்கீகரிக்க தொடங்கியது. கொேரானாவால் எனது குடும்பத்தில் 2 பேரை இழந்தேன். அதனால் சோர்ந்து போயிருந்த எனக்கு குடும்பத்தினர் ஆதரவும், அரவணைப்பும் தந்ததால்தான் சாதிக்க முடிந்தது. வரும் 2024ல் பாரிசில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *