• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார் விபத்து…

Byகாயத்ரி

Dec 2, 2021

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இவர் ஆய்வுக்காக திருச்சி விமான நிலையம் சென்றபோது தடுப்புக் கம்பியில் கார் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒமைக்ரான் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில் உடனடியாக அங்கிருந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றார். எனினும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.