• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நிகழ்ச்சியில் தற்போதுள்ள அரசியல் நிலை குறித்து கண்கலங்கிய துறை வைகோ …

ByK Kaliraj

Feb 19, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள சிப்பிபாறை கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் உட்பட மூன்று இளைஞர்கள் (பர்மா) மியான்மரில் தீவிரவாதிகளின் குடியிலிருந்து காப்பாற்றி உயிருடன் ஊர் திரும்பிட பெரும் முயற்சி மேற்கொண்டு மனித நேயத்துடன் உதவிய மதிமுகவின் இளம் தலைவர் துரை வைகோவிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சிப்பிபாறை கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த துரை வைகோவிற்கு சிப்பிப்பாறை கிராம பொதுமக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய துரை வைகோ தனக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியல் பிடிக்கவில்லை என்றும் காலச்சூழல் காரணமாக அரசியலுக்குள் வந்ததாகவும் தெரிவித்தார். எனினும் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் அரசியல் களமானது தனக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் பேசியபோது துரை வைகோவின் கண்கள் கலங்கியது.

மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் களம் ஆனது மிகவும் பரபரப்பாக காணப்படுவதாகவும் இந்த சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.