• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சஸ்பெண்ட்..,

ByK Kaliraj

Oct 7, 2026

சிவகாசியில் ரூபாய் 5000 லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார்.

அவரை வருகிற 16-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார் உத்தரவிட்டார். இது தொடர்ந்து சுகாதாரத் தறை துணை இயக்குனர் ஜெகதீரபாண்டியன் விருதுநகர் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜெக வீரபாண்டியனை சஸ்பெண்ட் செய்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.