• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இன்ஸ்டாகிராம் லோகோவை சூரிய ஒளியில் ஓவியமாக வரைந்த இளைஞர்!

ByK Kaliraj

Oct 7, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் உள்ள ஸ்டாண்டர்ட்டு காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கார்த்திக் சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து குவி மற்றும் குழி லென்ஸ்களைப் பயன்படுத்தி அதன் மூலமாக ஏற்படும் வெப்ப சூட்டின் மூலமாக மரப் பலகையில் எண்ணற்ற ஓவியங்கள் வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உருவான தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் லோகோவை சூரிய ஒளியிலேயே ஓவியமாக உருவாக்கி வெளியிட்டு, அதனை இணையதளத்தில் வைரலாக்கி, தனது சூரிய ஒளி ஓவியப் பயணத்தில் இன்ஸ்டாகிராமின் பங்களிப்பை நினைவு கூர்ந்து அனைத்து தரப்பினரிடமும் தகவலைப் பகிர்ந்துள்ளார்.