• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மது போதையில் தாய் தந்தையை வெட்டி கொலை செய்த மகன் கைது …

ByK Kaliraj

Feb 19, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் மணிகண்டன் (46) என்பவர் தனது மனைவி மகேஸ்வரி (40) மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

மணிகண்டன் சொந்தமாக ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருவதாக தெரியவருகிறது.

இந்நிலையில் மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், இந்த குடிப்பழக்கத்தினால் தினமும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்வதை வழக்கமாக இருந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றும் வழக்கம்போல மணிகண்டன் குடித்துவிட்டு தனது மனைவி மகேஸ்வரியுடன் சண்டையிட்டு உள்ளார். அப்போது கையில் அரிவாள் வைத்துக் கொண்டு மனைவி மகேஸ்வரியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது கணவன் மனைவி இருவருக்கும் சண்டை முற்றியதில் மணிகண்டன் கையில் வைத்திருந்த அறிவாளால் வீசியது மகேஸ்வரிக்கு கையில் வெட்டு விழுந்துள்ளதாக தெரியவருகிறது.

தாயின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த மகன் சுரேந்தர் (21) மணிகண்டன், மகேஸ்வரி, தம்பதியினரின் அப்பாவிற்கும், அம்மாவிற்கும் இடையே நடந்த சண்டையில் அம்மா மகேஸ்வரிக்கு வெட்டு காயம் ஏற்பட்டதை பார்த்த மகன் சுரேந்தர் பதற்றத்தில் அப்பா கையிலிருந்த அருவாளை பிடுங்கி அப்பா மணிகண்டனை வெட்டியதாக தெரிய வருகிறது.

வெட்டுக்காயம் அடைந்த மணிகண்டன் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் காயம்பட்ட அம்மா மகேஸ்வரியை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சம்பவம் குறிந்து விரைந்து வந்த ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் இறந்த மணிகண்டனின் மகன் சுரேந்தர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..