மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளிஅம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா கடந்த 11ம் தேதி காப்பு கட்டுதல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை இரவு கோவில்பட்டியில் இருந்து சக்தி கரகம் முளைப்பாரி ஊர்வலத்துடன் எடுத்துவரப்பட்டது. சனிக்கிழமை காலை கருப்பு சாமிக்கு படையல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பத்ரகாளியம்மன் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. 11 மணி அளவில் நந்தவனத்தில் இருந்து பால்குடம் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது ஏற்பாடுகளை வட்டப்பொட்டு சரவண நாடார் வகையறாக்கள், புண்ணாக்கு பெரிய கருப்ப நாடார் வகையறாக்கள், உறவின்முறை நிர்வாகிகள் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சௌந்தரபாண்டியன், துணைத் தலைவர் வையாபுரி, துணைச் செயலாளர் மனோகரன்நாகராஜ், பொருளாளர் ராஜபாண்டியன், பூசாரி நாகராஜன், கோடாங்கி பழனிவேல், அருளாடி சிவபெருமாள் ,பெட்டி பூசாரி பாலமுருகன், இளைஞர் சங்க நிர்வாகிகள் சூர்யகுமார், முருகேசன், மகேந்திரன், செல்லப்பாண்டி, நிதின்கணேஷ், செந்தில்ஆண்டவர், ஜெயசீலன் மற்றும் விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். உற்சவ விழாவில் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபாடு செய்தனர்.