• Fri. Apr 19th, 2024

பிப்.19ம் தேதி தடுப்பூசி முகாம் ரத்து!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், வரும் சனிக்கிழமை 23வது தடுப்பூசி முகாம் நடத்த இயலாது என மருத்துவத்துறை அமைச்சர் அறிவிப்பு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக பிப்ரவரி 19-ஆம் தேதி சனிக்கிழமை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், வரும் சனிக்கிழமை 23வது தடுப்பூசி முகாம் நடத்த இயலாது என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 22-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாம்களில் 15 -18 வயது சிறார்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிப்.19-ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 23வது தடுப்பூசி முகாம் நடத்த முடியாது எனவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *