• Fri. Mar 29th, 2024

இந்தியாவை வளைக்க அமெரிக்கா சதி ? பரபரப்பு தகவல்கள்

ரஷ்யாவில் இருந்து இந்தியா கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஏற்கனவே விமர்சனம் செய்த நிலையில் தற்போது இந்தியாவின் ராணுவ ரீதியான கொள்முதலையும் அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

உக்ரைன் போருக்கு இடையில் ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது. இந்தியாவின் இந்த வர்த்தகத்தை அமெரிக்கா விரும்பவில்லை. சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

ரஷ்யாவை இந்தியா சார்ந்து இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்ட கூடாது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் நாடுகள் பின்விளைவுகளை சந்திக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நேற்று அமெரிக்கா பாராளுமன்ற கூட்டுக்குழு அமர்வு ஒன்றில் பேசிய அமெரிக்கா எம்பி ஜோ வில்சன், இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியாவிற்கு ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர் வில்சன். இவர் இந்தியாவை விமர்சித்த போது, நம்முடைய நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடான இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக குடியரசு நாடு ஆகும். ஆனால் அந்த நாடு ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது.

ரஷ்யாவின் குழுவில்தான் இந்தியா உள்ளது. ரஷ்யாவின் ஆயுதங்கள் நம்பி உள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மதிக்காமல் இந்தியா இப்படி செய்கிறோம். இதை அமெரிக்கா தடுக்க வேண்டும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். இந்தியா ரஷ்யாவை ஆயுதங்களுக்கு நம்பி இருக்காமல். நம்மிடம் ஆயுதங்களை வாங்க வைக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லீலாய்ட் ஆஸ்டின், ரஷ்யாவிடம் இருந்து ராணுவ ரீதியான கொள்முதலை மேற்கொள்ள இந்தியா விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. இந்தியாவுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அவர்களுடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். ரஷ்யாவுடன் இந்தியா ராணுவ ரீதியான உறவுகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இந்தியா அதை விரும்பி செய்யவில்லை என்று நம்புகிறோம். இதுவரை எங்களின் நம்பிக்கை அதுவாகவே உள்ளது. அதோடு ரஷ்யாவின் பாதுகாப்பு உபகரணங்களில் இந்தியாவின் முதலீடு குறைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக உள்ளது. அவர்கள் ரஷ்யாவின் ராணுவ உபகரணங்களில் செய்யும் முதலீடுகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

எங்களின் பாதுகாப்பு உபகரணங்களில் இந்தியா முதலீடு செய்யும் செய்யும் பட்சத்தில் அது இரண்டு நாட்டிற்கான இணக்கமான உறவை ஏற்படுத்தும். நாம் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய பல ஆயுதங்கள் இருக்கின்றன, என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்தியாவிற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையிலான உறவு, வர்த்தக்கத்தை ஆராயும் நிறுவனமான ஏஎஸ்ஜி எனப்படும் Albright Stonebridge Group நிறுவனம், அமெரிக்காவிடம் ஆயுதங்களை இப்போது இந்தியா வாங்கும் வாய்ப்பு குறைவு. இந்தியா அமெரிக்காவின் அழுத்தங்களை ஏற்க வாய்ப்பு குறைவு. ரஷ்யாவிடம் இருந்து மட்டுமே இப்போது இந்தியா ஆயுதங்களை வாங்கும். இந்த நிலை மாற பல காலம் ஆகலாம் என்று கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *