• Fri. Apr 26th, 2024

தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 இயந்திர தீப்பெட்டி ஆலைகள் , 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன .

தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை கடந்த மூன்று மாதங்களில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளது .

இதனால் , கடும் நெருக்கடியை சந்தித்து வரும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் , 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் விலையை 300 ரூபாயில் இருந்து 350- ஆக உயர்த்த முடிவு செய்தனர் .

இந்த முடிவினை மொத்த வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை . இந்நிலையில் , மூலப்பொருட்களின் விலை உயர்வைக் ‍ கண்டித்து , தமிழகம் முழுவதும் இன்று முதல் 17 ஆம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூடி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர் .

இதன் காரணமாக , சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் , 6 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *