

இன்று தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையானது தலா 76 பைசா அதிகரித்துள்ளது.
கடந்த 16 நாட்களில் 14-வது முறையாக, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளன.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளன.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையானது தலா 76 பைசா அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.110.85-க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
