புதிய கல்விக்கொள்கை குறித்து முதல்வரின் பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் எல்முருகன் திமுக அரசை விமர்சித்துள்ளார்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை கோயம்பேடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய கல்விக்கொளகையில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் கூறியது குறித்தும், தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் பேசியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த எல்.முருகன், சில நேரங்களில் பேசவேண்டிய இடத்தில் எதையும் பேசமாட்டார்கள், அரசியலுக்காக வெளியில் வந்து பேசுவதுதான் திமுகவின் வாடிக்கையாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, என்றார்.