

பீகார் முதல்வர் நிதிஷ் உடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு . பீகார் சென்றுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் , அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். தொடர்ந்து மதிய உணவு அருந்திய இருவரும் மத்திய ,மாநில அரசியல் நிலவரம் குறித்து விவாதித்ததுடன் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கினைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். மத்தியில் ஆளும் பாஜக விற்கு மாற்றாக அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகரராவ் முயற்சி செய்து வருகிறார். இதற்காக அவர் பல கட்சி தலைவர்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
