• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் தலைமையில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
குன்னத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் .சின்னராஜ் , திமுக , ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் , அமமுக ,மற்றும் கல்லூரி மாணவர்கள், மகளிரணியினர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, , முன்னாள் முதல்வரும் ,எதிர்க்கட்சித் தலைவருமான , இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் , முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன்‌ தலைமை ஏற்றார் , பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர், ஜெயக்குமார் முன்னிலையில் , ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தனசேகர், குன்னத்தூர் பேரூர் கழக செயலாளர் .சரண் பிரபு ஆகியோர் வழிகாட்டுதலில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்