• Fri. Apr 26th, 2024

ஈரோட்டில் புதிய மாடூலர் அறுவை சிகிச்சை பிரிவு- அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்

வேல்மலர் ஈரோடு கேன்சர் சென்டரில் புதிய மாடூலர் அறுவை சிகிச்சை பிரிவை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
ஈரோடு பெருந்துறை ரோடு திண்டல் வேலவன் நகரில் உள்ள வேல்மலர் ஈரோடு கேன்சர் சென்டரில் புதுப்புபிக்கப்பட்ட அறுவை சிகிச்சை பிரிவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு முத்துசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ் நாகரத்தினம், துணை மேயர் வி செல்வராஜ், டாக்டர் கே எம் அபுல் ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதிய மாடூலர் ஆபரேஷன் தியேட்டர் குறித்து ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் கே வேலவன் கூறியதாவது.

ஈரோடு கேன்சர் சென்டரில் கடந்த 15 ஆண்டுகளாக ஈரோடு, திருப்பூர்,நாமக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வரும் கேன்சர் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு நவீன முறையில் மிக துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் கருவிகளான ஐ. எம். ஆர். டி, 3டி. சி. ஆர். டி, எச். டி. ஆர். கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அதிநவீன மயமாக்கப்பட்ட ஆபரேஷன் தியேட்டர் லேமினார் வசதியுடன் பில்டர் மிக நவீன மயக்க மருத்துவர் கருவிகளுடன் செயல்படுகின்றது. மேலும் இங்கு நவீன லேப்ராஸ்கோபி என் டாஸ்கோபி வசதிகளும் உள்ளது.சி -ஆர்ம் கருவிகளுடன் புற்று நோய்க்கு அதிநவீன வலி நிவாரண சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. இங்கே 5 படுக்கை வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவு, வென்டிலேட்டர் வசதியுடன் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று மாடுலர் லேப்ராஸ்கோபி, என்டாஸ்கோபி, கொலானஸ் கோபி மற்றும் ஆரம் சிறப்பு கேன்சர் அறுவை சிகிச்சை துறையை ஆகியவற்றை அமைச்சர் சி முத்துசாமி திறந்து வைத்துள்ளார்.ஈரோடு கேன்சர் சென்டர் மருத்துவமனை டாக்டர், நிர்வாக இயக்குனர் டாக்டர் கே வேலவன் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக இயக்குனர் டாக்டர் வேலவன், டாக்டர் ஏ பொன்மலர் இயக்குனர், அறக்கட்டளை உறுப்பினர் ஆர் விஜயராணி, மற்றும் டாக்டர் ஆர் மகேந்திரன், ஆர் சுரேஷ் குமார், ரூப விசாகன் ராஜா, எஸ் நிர்மல் அரசு, ஆர் மதுமிதா, வி.சதீஷ்குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *